ஏன் நெடுஞ்சாலைகளில் அரளி செடி நடுகிறாங்க தெரியுமா?
இயற்கை மாற்றம், மழையின்மை, வெயிலின் பாதிப்பு ஆகியவற்றை உணர்ந்து பலரும் வீட்டு முன் வேம்பு, புங்கை மரக்கன்றுகளை நடுகின்றனர். இதற்கு வழி இல்லாதவர்கள் மாடி தோட்டம் அமைக்கின்றனர்.
ஆனால் ரோடுகளில் அரளி செடி வைக்கின்றனர். நாம் தூர பயணங்களுக்கு செல்லும் போது சாலைகளில் அதிகமாக அரளி செடி இருக்கும்.
அது ஏன் வைத்திருக்கிறார்கள் என்று யாராவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அதற்கும் ஒரு ரகசியம் இருந்திருக்கு. பார்க்கலாம் வாங்க..!!
🌺 அபோசைனேசி (Apocenaceae) தாவர குடும்பத்தைச் சேர்ந்த நீரியம் ஓலியண்டர் (Nerium oleander) என்ற அறிவியல் பெயர் கொண்ட நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி என இரு வகைகள் உள்ளன. இவற்றின் மலர்களை கோயில்களில் தெய்வங்களுக்கு மாலையாகப் உபயோகிப்பதை நாம் பார்த்திருப்போம்.
🌻 எல்லா பருவ நிலையிலும், எல்லா காலங்களிலும் வளரக்கூடியது, செவ்வரளி. செவ்வரளிச் செடியின் மலர்கள், அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டவை. வீடுகளில் குழந்தைகள் தொடாத இடங்களிலும், தோட்டங்களிலும் அரளிச் செடிகளை வளர்க்கப்பட்டு வரப்படுகின்றன.
🌺 நெடுஞ்சாலைகளில் சாலைகளுக்கு நடுவே அதிகமாக அரளி செடிகளை வைக்கின்றனர். இதன் பூக்களை வாகனத்தில் செல்லும் போது நாம் பார்க்கும் போது இவை கண்ணுக்கு மிகவும் வண்ணமயத்தை தரும் காட்சியாக இருக்கும்.
🌻 நெடுஞ்சாலைகளில் பல்லாயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து போகின்றன. இந்த வாகனங்களிலிருந்து வெளிவரும் புகைகளில் கார்பன் நச்சுகள் அதிகமாக இருக்கும்.
🌺 இந்த நச்சுவாயு, காற்றை பாதிப்பதுடன் சாலையில் பயணம் செய்வோருக்கு சுவாசக் கோளாறுகளையும் உருவாக்கும். அதனால் தான் இதன் இலைகள் பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கறுப்பு நிறமாகவும் மாறி இருக்கும்.
🌻 அரளி செடியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி காற்றிலுள்ள மாசுகளை அகற்றி, தூய காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை.
🌺 இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். அதனால்தான் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
🌻 மேலும் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் உறிஞ்சுகிறது.
🌺 விலங்குகள் இயற்கையாகவே இந்தத் தாவரத்தின் இலைகளை உண்ணாது. அதனால் விலங்குகள் பாதிப்பும் இதற்கு இருக்காது.
🌻 இவை வறட்சியையும் தாங்கும் தன்மை கொண்டவை. மண் அரிப்பையும் தாங்கும் சக்தி கொண்டவை.
🌺 வாகனங்கள் தரும் இரைச்சலையும் குறைத்து, சத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் படைத்தவை.
🌻 பராமரிப்புக்கான செலவுகளும் மிகக் குறைவு. அழகோடு சேர்த்து இத்தனை வசதிகளும் இருப்பதால்தான் நிறைய நெடுஞ்சாலைகளில் இதைக் காணமுடிகிறது.
🌺 மேலும் இந்த செடி மற்றும் பூக்கள் காற்றினால் ஏற்படும் மாசை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

Post a Comment