China next target (சீனாவின் அடுத்த இலக்கு)
விண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா..!!
🚀 சீனா தன் புதிய விண்வெளி நிலையத்தை அமைக்க மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
🙌 நி ஹாய்ஷெங், லு பூமிங், டாங் ஹாங்போ ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் மூன்று மாதம் பூமியிலிருந்து 380 கிலோமீட்டர் தூரத்தில் டியான்ஹே என்ற விண்கலத்தில் தங்குவர்.
🚀 சீனாவின் விண்வெளி வீரர்கள் நீண்டகாலம் விண்வெளியில் தங்கவிருப்பது ஐந்து ஆண்டுகளில் இதுவே முதல்முறை.
🙌 ஷென்சூ 12 என்ற விண்கலம் (ஜூன் 16) அன்று கோபி பாலைவனத்திலுள்ள ஜியூகுவான் செயற்கை கோள் ஏவுதளத்திலிருந்து மார்க் 2 எஃப் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
3 விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள்?
🚀 22.5 டன் எடை கொண்ட டியான்ஹே விண்கலனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தான் கமாண்டர் நி ஹாய்ஷெங் மற்றும் அவரது அணியினரின் பிரதான வேலை.
🌀 இந்த டியான்ஹே விண்கலம் தான் சீனா அமைக்க இருக்கும் 70 டன் எடை கொண்ட விண்வெளி மையத்தின் முதல் முக்கிய அங்கமாகும். சீனா திட்டமிட்டிருக்கும் விண்வெளி மையத்தில், விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான இடம், அறிவியல் ஆய்வகங்கள், பேரண்டத்தைக் காண தொலைநோக்கி போன்றவைகள் எல்லாம் இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
🚀 அடுத்த இரண்டு ஆண்டுகளில் மற்ற பாகங்கள் எல்லாம் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும்.
சீனாவின் விண்வெளி இலக்குகள் என்ன?
🌀 சீனா தன் விண்வெளி முயற்சிகளில் கணிசமாக பணத்தை செலவழித்தது, கடந்த 2019ஆம் ஆண்டில் நிலவின் தொலைதூரத்திற்கு இயந்திர ரோவரை அனுப்பிய முதல் நாடு என்கிற பெருமையை பெற்றது.
🚀 சர்வதேச விண்வெளி மையத்தில் சீனா ஒரு கூட்டாளி நாடு அல்ல. எனவே விண்வெளி மையத்தை அமைப்பதில் தனித்து செயல்பட வேண்டி இருந்தது.
🌀 'நாங்கள் ஒத்துழைப்புகளை வரவேற்கிறோம்" என ஷென்சூ 12 அறிமுகம் தொடர்பாக கடந்த புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திபில், சீனாவின் மனித விண்வெளிப் பயண முகமையின் உதவி இயக்குநர் ஜி க்விமிங் கூறியுள்ளார்.

Post a Comment